நாகநாதர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


நாகநாதர் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 3 April 2017 4:00 AM IST (Updated: 3 April 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே உள்ள பாமணி நாகநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மன்னார்குடி,

மன்னார்குடி அருகே பாமணி கிராமத்தில் நாகநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் ராகு-கேது தோஷ பரிகார தலமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவுற்ற நிலையில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த மார்ச் 30-ந் தேதி யாகசாலைபூஜை தொடங்கியது. இதை தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தன. 31-ந் தேதி முதல் கால பூஜை நடந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று கடம் புறப்பாடு நடைபெற்றது. முதலில் விமான கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பின்னர் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் மன்னார்குடி செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரி கல்வி அறக்கட்டளை தாளாளர் வி.திவாகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story