கல்வியால் மட்டுமே பாகுபாடற்ற சீரான சமுதாயத்தை உருவாக்க முடியும்
கல்வியால் மட்டுமே பாகுபாடற்ற சீரான சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று கலெக்டர் கோவிந்தராஜ் கூறினார்.
கரூர்,
அரவக்குறிச்சி அருகே உள்ள சீத்தப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கலெக்டர் கோவிந்தராஜ் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசிய தாவது:-
தமிழக அரசு கல்விக்காக அனைத்து திட்டங்களையும் விலையில்லாமல் வழங்கி வருகிறது. இதனால் மாணவ- மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைகின்றனர். அதேபோன்று அதிக மதிப்பெண்களும் பெறுகின்றனர். குக்கிராமங்களில் பயிலும் மாணவ- மாணவிகள் உலகளாவிய அறிவை பெற வேண்டும் என்ற அடிப்படையில் மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விலையில்லாமல் வழங்கி வருகிறது. இதனால் தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாக உருவாகி கொண்டிருக்கிறது.
உருவாக்க வேண்டும்
எனவே தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாணவ- மாணவிகளுக்கு சிறந்த கல்வியையும், நல்ல நீதி, போதனைகளையும் சொல்லி கொடுக்க வேண்டும். தொடக்கக்கல்வி சிறப்பாக அமைந்தால்தான் தொடர்கல்விகளும் சிறப்பாக அமையும். இந்த உன்னத எண்ணத்தை அடிப்படையாக கொண்டு ஆசிரியர்கள் அறப்பணியினை செம்மையாக செய்ய வேண்டும். கல்வியால் மட்டுமே பாகுபாடற்ற சீரான சமுதாயத்தை உருவாக்க முடியும். புதிய தொழில்நுட்பங்கள், கற்றல், கற்பித்தல் முறைகள் ஆகிய யுக்திகளை கையாண்டு சிறந்த சமுதாயம் அமைய நல்ல மாணவ- மாணவிகளை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Next Story