அய்யர்மலை ரத்தினகிரீசுவரர் கோவிலில் ரோப்கார் அமைக்கும் பணிகள் தொடக்கம்
அய்யர்மலை ரத்தின கிரீசுவரர் கோவிலில் ரோப்கார் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குளித்தலை,
கரூர் மாவட்டம் குளித்தலை- மணப்பாறை சாலையில் அய்யர்மலை உள்ளது. இங்கு பாடல் பெற்ற சிவத்தலமான ரத்தினகிரீசுவரர் கோவில் உள்ளது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவில் சுமார் 4 கிலோ மீட்டர் சுற்றளவும், கடல் மட்டத்தில் இருந்து 1,178 அடிகள் உயரத்திலும் உள்ளது. மலை உச்சிக்கு செல்ல 1,017 படிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அப்போது பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் இங்கு வந்து இப்படிகளில் ஏறி மலை உச்சிக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தனர். இதில் சிறிய குழந்தைகள், முதியோர்கள் படிகளில் ஏறி மலை உச்சிக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். எனவே இங்கு ரோப்கார் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ரோப்கார்
இதையடுத்து தி.மு.க. ஆட்சி காலத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ரோப்கார் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
குளித்தலை முன்னாள் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரை தலைவராகக்கொண்டு ரோப்கார் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டு, பொதுமக்களிடம் இருந்து நிதி வசூலிக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு பிறகு இத்திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இதன்பின்னர் பல்வேறு துறை வல்லுநர்கள் இங்கு ரோப்கார் அமைப்பதற்காக காற்றின் வேகத்தை அளவிடுதல், பாறைகளின் உறுதித்தன்மை, திருவிழாக்கள் மற்றும் தினந்தோறும் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்து வந்தனர்.
பக்தர்கள் மகிழ்ச்சி
இதையடுத்து இக்கோவிலில் ரோப்கார் அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. ரூ.6 கோடியே 70 லட்சம் இத்திட்டத்திற்கான செலவு தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரோப்கார் திட்டத்திற்காக பொதுமக்கள் மூலம் தற்போது வரை சுமார் 3 கோடி நன்கொடையாக பெறப்பட்டு வங்கியில் உள்ளது. பற்றாக்குறையாக உள்ள தொகை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல கோவில்களில் இருந்து பெறப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ரோப்கார் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை போடப்பட்டது. தற்போது ரோப்கார் அமைக்க அய்யர்மலையின் கீழ் பாறைகள் உடைக்கப்பட்டு பள்ளம் தோண்டப்பட்டுள் ளது.
ரோப்கார் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதை அறிந்த இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story