சித்தூர் தென்கரை மகாராஜேசுவரர் கோவிலில் பங்குனி உத்திர விழா
வள்ளியூர் அருகே அமைந்துள்ள சித்தூர் தென்கரை மகாராஜேசுவரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வள்ளியூர்,
வள்ளியூர் அருகே அமைந்துள்ள சித்தூர் தென்கரை மகாராஜேசுவரர் கோவிலானது, சாஸ்தா கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலையில் சுவாமிக்கு சிறப்பு கும்பாபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும், அபிஷேகங்களும் நடந்தன. பின்னர் 11 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் காலையில் அபிஷேக பூஜையும், மதியம் கும்பாபிஷேக தீபாராதனையும், இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
தேரோட்டம்
7–ந் தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு தளவாய் சுவாமி சன்னதியில் கற்பூர ஜோதி தரிசனம் நடக்கிறது. 8–ம் திருநாளன்று (ஞாயிற்றுக்கிழமை) பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது. இரவில் சுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார். அதனை தொடர்ந்து குதிரையில் வன்னிக்குத்து நிகழ்ச்சி நடக்கிறது. 9–ம் திருவிழா நாளன்று காலை 10.30 மணிக்கு மேல் தேரோட்டமும், அதனை தொடர்ந்து குதிரை ஓட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் சீதாலெட்சுமி, செயல் அலுவலர் காந்திமதி மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
ஆலடிப்பட்டி வைத்திலிங்க சுவாமி
ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டி வைத்திலிங்க சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து வைத்திலிங்க சுவாமி–யோகாம்பிகை அம்பாள் மற்றும் அப்பர் சுவாமி, விநாயகர், முருகன் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வீதிஉலாவும், இரவில் ஏக சிம்மாசனத்தில் சுவாமி–அம்பாள் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 11–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலையில் தேரோட்டம் நடக்கிறது.
கொடியேற்றம் நிகழ்ச்சியில் கட்டளைதாரர் ரமேஷ், நல்லூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ஞானசுந்தரி உள்பட பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா சவுந்திரராஜன் செய்து வருகிறார்.

Next Story