புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்

நெல்லை,
புரட்சிகர இளைஞர் கழகம் சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். மருத்துவ கல்விக்கான ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும். அணுஉலை, ஹைட்ரோ கார்பன் திட்டங்களையும் கைவிட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட அமைப்பாளர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ், ஏ.ஐ.சி.சி.டி.யு. தொழிற்சங்க மாவட்ட பொது செயலாளர் கணேசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் நிர்வாகிகள் சுபாஷ், ராமலிங்கம், செல்வம், பேச்சிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் உடலில் இலைகளை கட்டிக் கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

Next Story