கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் பெண்கள் உள்பட 81 பேர் கைது


கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் பெண்கள் உள்பட 81 பேர் கைது
x
தினத்தந்தி 14 April 2017 5:00 AM IST (Updated: 13 April 2017 7:01 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 81 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூரை சேர்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முருகன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் சக்குடி அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்தால் தான், முருகனின் உடலை பெறுவோம் என்று கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் சிவகங்கை மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முருகன் கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை தீண்டாமை ஒழிப்பு பிரிவு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று மாவட்ட செயலாளர்கள் திருமொழி மற்றும் உதயகுமார் ஆகியோர் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தி, கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட முயன்றனர். இதில் மாநில அமைப்பு செயலாளர் எல்லாளன், மாநில துணை செயலாளர் நந்தன், தொகுதி செயலாளர்கள் முத்துவரசு, பாலையா மற்றும் செல்லபாண்டியன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

81 பேர் கைது

இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதாக 23 பெண்கள் உள்பட 81 பேரை துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மங்களேசுவரன், ரமேஷ், நகர் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.


Next Story