கமுதியில் இருந்து மதுரை வந்த தனியார் பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது 30 பயணிகள் படுகாயம்
கமுதியிலிருந்து மதுரைக்கு தனியார் பஸ் ஒன்று மதுரை மண்டேலா நகர் ரிங்ரோட்டில்
அவனியாபுரம்,
கமுதியிலிருந்து மதுரைக்கு தனியார் பஸ் ஒன்று மதுரை மண்டேலா நகர் ரிங்ரோட்டில் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 30–க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். பஸ் முன்னால் சென்ற லாரியை முந்த முயன்ற போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி ஈச்சனோடை கண்மாய் அருகில் தலை குப்புற கவிழ்ந்தது. உள்ளே சிக்கிய பயணிகள் அலறினர். சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடி வந்து பஸ்சில் இருந்தவர்களை காப்பாற்றினர். படுகாயம் அடைந்த கமுதியை சேர்ந்த நர்சு மணிமேகலை, ராணி, ராஜேஸ்வரி, மீனா உள்ளிட்ட 30 பயணிகளை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த 6 பேர் மேல்சிகிச்சைக்காக பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீஸ் உதவி கமிஷனர் முத்துக்குமார், அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் நல்லு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மதுரை டவுன் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கமுதியை சேர்ந்த பஸ் டிரைவர் திருமூர்த்தியிடம் விசாரித்து வருகிறார்கள்.