100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை


100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 14 April 2017 4:30 AM IST (Updated: 13 April 2017 11:57 PM IST)
t-max-icont-min-icon

100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் வழங்கக்கோரி சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

கோபால்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. சம்பளம் வழங்கப்படாததால் தொழிலாளர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இதையடுத்து தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சாணார்பட்டி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். மேலும் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க வட்டார தலைவர் சுப்புராஜ் தலைமை தாங்கினார்.

சாணார்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மருதமுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஆர்ப்பாட்டம்

இதேபோல், குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள திருக்கூர்ணம் மற்றும் கோட்டாநத்தம் ஊராட்சிகளில் 100 நாள் திட்டத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாநில குழு உறுப்பினர் ஜெயவீரன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.

Next Story