சுங்குவார்சத்திரம் அருகே போலி டாக்டர் கைது 3-வது முறையாக சிக்கினார்
சுங்குவார்சத்திரம் அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தை அடுத்த ஓ.எம்.மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சாரதி (வயது 59). ஓ.எம்.மங்கலம் கிராமத்தில் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இவர் ஓமியோபதி மருத்துவம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் செய்து வந்ததாக தெரியவந்தது.
இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர் சுந்தர்ராஜ் தலைமையிலான குழுவினர் சாரதி நடத்தி வந்த ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கைது
அங்கு சாரதி நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இணை இயக்குனர் சுந்தர்ராஜ் அளித்த புகாரின்பேரில் சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து சாரதியை கைது செய்தார்.
போலி டாக்டராக சாரதி ஏற்கனவே 2 முறை கைதாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story