விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: கத்திப்பாரா மேம்பால சாலையை சங்கிலியால் கட்டி பூட்டு போட்டனர்
விவசாயிகளுக்கு ஆதரவாக கத்திப்பாரா மேம்பாலத்தில் சாலையின் குறுக்கே சங்கிலியால் கட்டி பூட்டு போட்டு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
ஆலந்தூர்,
விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த ஒரு மாதமாக பல்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்திலும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர், மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு நேற்று காலை 9.30 மணியளவில் திரைப்பட இயக்குனர் கவுதமன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்தனர்.
திடீரென அவர்கள், கிண்டி ஈக்காட்டுத்தாங்கல்-விமான நிலையம் செல்லும் மேம்பாலத்தின் மைய பகுதியில் சாலையின் குறுக்கே மேம்பாலத்தின் இருபுறத்தையும் இணைத்து இரும்பு சங்கிலியால் கட்டி, பூட்டு போட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் இருந்து விமான நிலையம் நோக்கி சென்ற வாகனங்களும், விமான நிலையத்தில் இருந்து ஈக்காட்டுத்தாங்கல் நோக்கி சென்ற வாகனங்களும் மேம்பாலத்தில் நடுவழியில் நிறுத்தப்பட்டன.
போராட்டக்காரர்கள் மேம்பாலத்தில் சாலையின் நடுவே அமர்ந்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து அசோக் நகர், கிண்டி, பட்ரோடு ஆகிய பகுதிகளிலும், கத்திப்பாரா மேம்பாலத்தின் அடி பகுதி மற்றும் பாலத்தையொட்டி உள்ள பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
போலீசார் பேச்சுவார்த்தை
காலை நேரம் என்பதால் அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்பவர்களும், விமான நிலையத்துக்கு செல்பவர்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தனர். போராட்டம் காரணமாக ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கின. இதனால் நோயாளிகள், பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை, கிண்டி, விமான நிலையம், வேளச்சேரி போலீஸ் உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் போக்குவரத்து நெரிசல் காரணமாக சுமார் 30 நிமிடம் தாமதமாகவே போராட்டம் நடந்த இடத்துக்கு அவர்களால் செல்ல முடிந்தது.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே போராட்டத்தை கைவிட வேண்டும் என போலீசார் கூறினர்.
6 பேர் கைது
ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், விவசாயிகள் பிரச்சினையில் நியாயம் கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று கூறி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் கத்திப்பாரா பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் ஸ்தம்பித்து நின்றது.
இதையடுத்து போலீசார், சாலையின் ஒரு புறத்தில் கட்டப்பட்டு இருந்த சங்கிலியை உடைத்து, வாகனங்களை செல்ல அனுமதித்தனர். இதற்கும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் தெரிவித்தனர். ஆனால் யாரும் கலைந்து செல்ல மாட்டோம் என்று மறுத்தனர்.
பின்னர் சாலையில் அமர்ந்து இருந்த இயக்குனர் கவுதமன் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்களை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து அப்புறப்படுத்தினார்கள். சிலரை குண்டு கட்டாக தூக்கிச் சென்று சாலையின் ஓரமாக வைத்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது இயக்குனர் கவுதமனுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பரங்கிமலை போலீசார், இயக்குனர் கவுதமன்(வயது 44), கல்லூரி மாணவர் அரவிந்த்(22), உமாகார்கி(23), கோபாலகிருஷ்ணன்(47), பிரபாகரன்(26), அருள்(30) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களை ஒரு வேனில் ஏற்றி ஆலந்தூரில் உள்ள ஒரு திருமண மண்படத்தில் தங்க வைத்தனர்.
போக்குவரத்து சீரானது
அதைத்தொடர்ந்து பாலத்தின் குறுக்கே மின்சார கம்பத்தில் கட்டப்பட்டு இருந்த சங்கிலியின் பூட்டை உடைத்து, சங்கிலியை அகற்றி போக்குவரத்துக்கு போலீசார் வழிவகை செய்தனர். சுமார் 1 மணி நேரத்துக்கு பின்னர் கத்திப்பாரா பகுதியில் போக்குவரத்து சீரானது. மேலும் அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போராட்டம் குறித்து இயக்குனர் கவுதமன், நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இந்தியா முழுவதும் 25 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். விவசாயிகளே இந்த நாட்டின் முதுகெலும்பு என்று காந்தியடிகள் கூறினார். ஆனால் மத்திய அரசோ, விவசாயிகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இளைஞர்கள் போராட வேண்டும்
ஜல்லிக்கட்டுக்காக திரண்டது போல விவசாயிகளை காப்பதற்காக இளைஞர்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட வேண்டும். ரெயில் மறியல் போராட்டத்்திலும் பங்கேற்க வேண்டும்.
தமிழர்களின் பிரச்சினைகளான காவிரி நதிநீர் பிரச்சினை, கச்சத்தீவு விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
போக்குவரத்து போலீசார் இல்லை
வழக்கமாக கத்திப்பாரா மேம்பாலத்தில் போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருப்பார்கள். ஆனால் நேற்று போக்குவரத்து போலீசார் யாரும் இல்லை என்று தெரிகிறது. இதனால் போராட்டக்காரர்கள் சாலையை சங்கிலியால் கட்டி பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டதை தடுக்க முடியாமல் பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தி விட்டது.
எனவே இனிமேல் எந்த நேரமும் கத்திப்பாரா மேம்பாலத்தில் போக்குவரத்து போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்துவது என போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
சிறையில் அடைப்பு
இதற்கிடையில் கைதான 6 பேர் மீதும் 7 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அனைவரையும் ஆலந்தூர் கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு சுல்தான் ஆபிரீன் முன்பு ஆஜர்படுத்தினர். 6 பேரையும் வருகிற 25-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
அப்போது 6 பேரையும் ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என வக்கீல்கள் சிவஞானம், கணேசன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவுக்கு போலீஸ், அரசு வக்கீல் ஆகியோர் வருகிற 17-ந் தேதி பதில் மனு தாக்கல் செய்யும்படி மாஜிஸ்திரேட்டு உத்்தரவிட்டார்.

Next Story