தஞ்சாவூர் உள்பட 5 ரெயில் நிலையங்களில் அதிவேக ‘வை-பை’ வசதி விரைவில் தொடக்கம்
தஞ்சாவூர் உள்பட 5 ரெயில் நிலையங்களில் அதிவேக ‘வை-பை’ வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஏ.கே.அகர்வால் தெரிவித்தார்.
திருச்சி,
திருச்சி கோட்ட ரெயில்வேயில், 62-வது ரெயில்வே வார விழா திருச்சி ஜங்ஷனில் உள்ள கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவில் திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் ஏ.கே.அகர்வால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 2016-2017-ம் நிதி ஆண்டில் தெற்கு ரெயில்வேயில் திருச்சி கோட்டம் சிறந்த கோட்டத்திற்கான விருது பெற்றுள்ளது. வணிகம், பாதுகாப்பு, இயக்குதல், மருத்துவம், கணக்கு ஆகிய 5 பிரிவுகளுக்கு சிறந்த விருது கிடைத்துள்ளது. திருச்சி கோட்டத்தில் ஒட்டுமொத்த ரெயில்வே ஊழியர்களின் ஒத்துழைப்பால் இந்த விருதுகள் கிடைத்துள்ளன.
இருவழி அகல ரெயில்பாதை
திருச்சி கோட்டத்தில் கடந்த 2016-2017-ம் நிதி ஆண்டில் 3 கோடியே 66 லட்சம் பயணிகள் ரெயில் பயணம் செய்துள்ளனர். சரக்கு ரெயில் போக்குவரத்தில் 8.373 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. பயணிகள் மூலம் ரூ.300 கோடியே 25 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இதனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது 5.08 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்கு ரெயில் போக்குவரத்து மூலம் ரூ.393 கோடியே 49 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. கடந்த நிதி ஆண்டை ஒப்பிடும் போது 18.82 சதவீதம் அதிகரித்துள்ளது.
2016-2017-ம் நிதி ஆண்டில் 176 நாட்கள் 100 சதவீதம் சரியான நேரத்தில் ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளன. விழுப்புரம்-திருச்சி இடையே இருவழி அகல ரெயில் பாதை பணி பகுதி, பகுதியாக முடிக்கப்பட்டு, ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வாளாடி-பொன்மலை இடையே பணிகள் நிறைவுபெற்று விட்டன. இந்த புதிய பாதையில் அடுத்த மாதம் முதல் ரெயில்கள் இயக்கப்படும்.
‘வை-பை’ வசதி
திருச்சி கோட்டத்தில் கடந்த நிதி ஆண்டில் 39 ஆள் இல்லா ரெயில்வே கேட்டுகளுக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 30 ஆள் இல்லா ரெயில்வே கேட்டுகள் மூடப்பட்டுள்ளன. பயணிகளுக்கான பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அதிவேக ‘வை-பை’ வசதி பயன்பாட்டில் உள்ளது. இதேபோல திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், புதுச்சேரி ஆகிய 5 ரெயில் நிலையங்களிலும் அதிவேக ‘வை-பை’ வசதி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து திருச்சி கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ரெயில்வே ஊழியர்கள் 660 பேருக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை கோட்ட மேலாளர் ஏ.கே.அகர்வால் வழங்கினார்.
விருதுகள்
தெற்கு ரெயில்வேயில் சென்னையில் நேற்று முன்தினம் நடந்த விழாவில், திருச்சி கோட்டத்திற்கு வழங்கப்பட்ட சிறந்த விருதினை கோட்ட ரெயில்வே மேலாளர் ஏ.கே.அகர்வால் விழா மேடையில் காண்பித்தார். மேலும் 5 பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட விருதுகள், அந்தந்த பிரிவு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன. விருது பெற்ற அதிகாரிகளை கோட்ட ரெயில்வே மேலாளர் ஏ.கே.அகர்வால் பாராட்டினார். விழாவில் கூடுதல் கோட்ட மேலாளர் சர்மா, முதுநிலை கோட்ட வணிக மேலாளர் அருண் தாமஸ் கலாதிகல், எஸ்.ஆர்.எம்.யூ. கோட்ட தலைவர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்ட தனி அதிகாரி சங்கரன் நன்றி கூறினார்.

Next Story