திருப்பூரில் பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரியை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


திருப்பூரில் பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரியை கண்டித்து மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 April 2017 4:30 AM IST (Updated: 14 April 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரியை கண்டித்து திருத்துறைப்பூண்டியில் மாதர் சங்கத்தினர் மதுபாட்டில்களை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருத்துறைப்பூண்டி,


சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் தமிழகத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3,400 மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த கடைகளுக்கு பதிலாக வேறு இடங்களில் மதுக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது ஈஸ்வரி என்ற பெண்ணை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்ப்பாட்டம்

இதை கண்டித்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே இந்திய மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சாலையில் மதுபாட்டில்களை உடைத்து துடைப்பத்தால் அடித்தும், பெண்ணை தாக்கிய கூடுதல் போலீஸ் சூப்பிரண்டை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.இதில் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் குருமணி, மாவட்ட துணைச்செயலாளர்கள் சுஜாதா, மரின்மன்மதன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மாதர் சங்கத்தினர் கலந்துகொண்டனர். 

Next Story