பணி நிரந்தரம் செய்யக்கோரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பணி நிரந்தரம் செய்யக்கோரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 April 2017 4:30 AM IST (Updated: 14 April 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்யக்கோரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி,

புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சேஷாச்சலம் தலைமை தாங்கினார்.

இதில் ஊழியர்கள் சங்க தலைவர் வாணிதாசன், பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, இணை செயலாளர் தேவன், பொருளாளர் சேதுராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நோயாளி பராமரிப்பு படி வழங்க வேண்டும், சமவேலை, சம ஊதியம் என்ற கோட்பாட்டை சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Next Story