முல்லைத் தமிழ் மணக்கும் நெல்லை
‘முல்லைத் தமிழ் மணக்கும் நெல்லை’ என்று நெல்லையை புகழ்வதற்கு பல காரணங்கள் உண்டு.
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், தாம் பாடிய தேவாரத்தில் திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலி பற்றி பத்து பாக்கள் பாடி உள்ளார். நெல் வயல் சூழ்ந்த நெல்வேலி பாடல் பெற்ற ஸ்தலமாகியதால், திருநெல்வேலி என்று பெயர் பெற்று விளங்குகிறது. 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும்புலவர் ராமானுஜ கவிராயர் பன்னிராயிரம் பாக்களால் காந்தி காவியம் பாடி உள்ளார். ஆங்கிலத் திலும் அந்த நூல் ஆக்கம் பெற்றது. தமிழுக்கு நோபல் பரிசு கிடைக்க இருந்த வேளையில் 1985-ம் ஆண்டு ராமானுஜ கவிராயர் காலமானதால் கிடைக்கவில்லை.
பெரும்புலவர் ராமானுஜ கவிராயர், தமிழில் பத்து நூல்களும், ஆங்கிலத்தில் எட்டு நூல்களும் எழுதி உள்ளார். அவருடைய மகன் ராமானுஜ கள்ளப்பிரான், பாண்டியன் கிராம வங்கி நிர்வாகியாக (நிறுவனராக) பணியாற்றியவர். மாநில தமிழ்ச்சங்கத்தின் தலைவராக திகழ்கிறார். திருக்குறள் ஆங்கில ஆக்கம், மேலாண்மை இயல் நூலாக்கம், இசைப்பாடல் இயற்றல், உரைவிளக்கம் என்று பல்லாற்றலுடன் தமிழ் வளர்ச்சிக்கு பணியாற்றுகிறார்.
உலகின் உயர் தனிச் செம்மொழியாகிய தமிழுக்கு 250 அடைமொழிகள் உள்ளன. அது முத்தமிழ் என்று போற்றப்படுவதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய திருக் குறளே அடிப்படை ஆகும். “இருமை வகை தெரிந்து ஈண்டறம் காப்பான் பெருமை பிறங்கிற்று உலகு” (23) என்ற திருக்குறளுக்கு எழுதப்பட்ட பரிமேலழகர் உரை இதில் குறிப் பிடத்தக்கது. “தெரிமாண் தமிழ் மும்மை தென்னம் பொருப்பன்” என்னும் பரிபாடல் தொடர், முத்தமிழை பேணி பாதுகாக்கும் பொதிகை மலை மன்னன் பற்றி கூறுகிறது.
பொதிகை தென்றலின் பெருமை இளங்கோ எழுதிய சிலப்பதிகாரத்தில் சிறப்பிடம் பெறு கிறது. தோன்றும் திசையால் காற்று 4 வகையான பெயர்கள் பெறுகிறது. தெற்கே இருந்து வரும் காற்று தென்றல், வடக்கே இருந்து வரும் காற்று வாடை, கிழக்கே இருந்து வரும் காற்று கொண்டல், மேற்கே இருந்து வரும் காற்று கோடை என்பர்.
பொதிகை மலையில் இருந்து புறப்படுவது பொருநை என்னும் தாமிரபரணி ஆறு. காரையாறு என்பது சுண்ணாம்பு ஆறு என்பர். ஆறுகள் பல கலப்பதால் சேர்வலாறு எனப்படுகிறது. பொருநையாறு, 120 கிலோ மீட்டர் பாய்ந்து சென்று புன்னைக்காயல் என்ற இடத்தில் கடலுடன் கலக்கிறது. பொன் கொழிக்கும் பொருநை என்று போற்றப்பட்ட தாமிரபரணி ஆறு, பயிர் வளரவும் உயிர் தழைக்கவும் பேருதவி புரிந்து வருகிறது.
நடராஜ பெருமான் என்று போற்றப்படும் கூத்தரசர் ஆடும் மேடையாகிய அம்பலங்கள் 5 ஆகும். சிதம்பரம் பொன்னம்பலம் எனவும், மதுரை வெள்ளி அம்பலம் எனவும், நெல்லை தாமிர அம்பலம் எனவும், குற்றாலம் சித்திர அம்பலம் எனவும், ஆலங்காடு ரத்தின அம்பலம் எனவும் அழைக்கப்படுகின்றன. 5 அம்பலங் களில், இரண்டு நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ளன.
மெய்கண்டார் அருளிய சிவஞான போதத்துக்கு விளக்க உரை வழங்கிய சிவஞான முனிவர் விக்கிரமசிங்கபுரம் வட்டாரத்தில் 18-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்துள்ளார். திரிகூடராசப்ப கவிராயர் திருக்குற்றால குறவஞ்சி உள்பட பல பாடல்களை பாடி உள்ளார். சென்னிகுளம் அண்ணாமலையார் பாடி உள்ள காவடி சிந்து முருகபெருமாள் அருள் பெற துணை புரியும். 8 ஆயிரம் ஆண்டுகளாக தமிழிசை வளர்ந்து வருகிறது என்று, கருணாமிர்த சாகரம் என்ற இசை ஆராய்ச்சி நூல் தந்த ஆபிரகாம் பண்டிதர் சுரண்டை வட்டாரத்தில் தோன்றியவர். நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பவும், சைவம் தழைத்தோங்கவும் உழைத்த சான்றோர் பலரும் இங்கு வாழ்ந்துள்ளனர்.
நாராயணனின் புகழ் பாடும் 12 ஆழ்வார் களுள் நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகியோர் ஒருங் கிணைந்த நெல்லை மாவட்ட பெருமக்கள் ஆவர். 2-வது தமிழ்ச்சங்கம் கொற்கையில் 3 ஆயிரத்து 700 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதிய பனம்பாரனார் சாத்தான்குளத்தை அடுத்த பன்னம்பாறை என்ற ஊரை சேர்ந்தவர் ஆவார். தமிழ், தெலுங்கு, வடமொழி ஆகிய மும்மொழி புலமை பெற்ற சுப்பிரமணிய தீட்சிதர் திருக்குருகூரை சேர்ந்தவர். அவர்தான் இத்தாலிய தமிழ் அறிஞர் வீரமாமுனிவரின் தமிழ் ஆசான் ஆவார்.
16-ம் நூற்றாண்டில் (1542-1552) 10 ஆண்டுகளாக இருபத்து மூன்று கடல் ஓரத்து சிற்றூர் மக்களுக்காக சேவை செய்த தூய சவேரியார் தனிப்பெருமையும் புகழும் வாய்ந்தவர் ஆவார். அச்சுக்கலையின் தந்தையாகிய ஆந்திரிக்கஸ் அடிகளார் புன்னக்காயலில் தமிழ் கல்லூரி நடத்தி உள்ளார். வித்தக புலவர் வீரமாமுனிவர் இத்தாலியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்து காமநாயக்கன்பட்டியில் பணியாற்றியபோது தமிழை முழுமையாக கற்றார்.
தேம்பாவணி உள்பட 35 நூல்கள் கிடைப்பதற்கு அடித்தளமாக அமைந்தது நெல்லை மாவட்டம். அயர்லாந்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தந்த கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதி தமிழின் பெருமையை உலகறியச் செய்தார். ஆதிச்சநல்லூரில் அகழாய்வை மேற்கொண்டு, சிந்துசமவெளி நாகரிகத்துக்கும் முன்னோடியாக ஆதிச்சநல்லூர் திகழ்ந்து இருப்பதாக புகழ்ந்துள்ளார். இங்கிலாந்தில் இருந்து சாயர்புரத்துக்கு வருகை தந்து திருமறை தொண்டும், தமிழ்த்தொண்டும் மேற்கொண்ட சார்ச்சு யுக்ளோ போப்பையர் திருக்குறளையும், திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் உருவாக்கினார். ஜெர்மனியில் இருந்து தமிழகத்துக்கு வருகை தந்த ரேனியஸ் அறிவியல் நூல்களை தமிழில் கற்பிப்பதற்கு வழிவகுத்த முன்னோடி ஆவார். உலகம் சுற்றி வந்து தமிழ்த்தூதராக விளங்கிய தனிநாயகம் அடிகளார் வடக்கன்குளத்தில் தமிழை முறையாக படிக்கும் வேட்கை உடையவர் ஆனார்.
‘இஸ்லாம் எங்கள் வழி, இனிய தமிழ் எங்கள் மொழி’ என்று ஈடுஇணையற்ற சீறாப்புராணம் பாடிய உமறுப்புலவர் போன்ற சான்றோர் பலர் தீன் மறையும், தீந்தமிழும் தழைத்திட உழைத்தனர். இந்திய தேசிய மொழியாக தமிழை ஏற்றிட வற்புறுத்திய கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் நெல்லை பேட்டை பகுதியில் வாழ்ந்தவர். பொட்டல்புதூர், ஆற்றங்கரை, காயல்பட்டினம் போன்ற ஊர்கள் சமயம், வணிகம், மொழி, தொண்டு ஆகியவை செழித்திட வழிகாட்டி உள்ளன. இந்திய வானொலி நிறுவனம் தேர்வு செய்த தேசிய பாவலராக மேலப்பாளையம் த.மு.சா.காஜா மைதீன் திகழ்கிறார்.
சேமமுற வேண்டும் எனில் தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர் என்றார் பாட்டுக்கொரு புலவர் பாரதியார். நெல்லையிலும், பாளையங்கோட்டையிலும் ஆணையாளராக பணிபுரிந்த ஆட்சி மொழிக் காவலர் ராமலிங்கம், தெருப்பெயர்கள் அனைத்திலும் சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் ஆகியவற்றை தந்த பெருமக்களின் பெயரை நிலைபெறச் செய்தார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள், பன்னிரு திருமுறை அருளிய சான்றோர், நாலாயிரம் தெய்வ பனுவல் (பாட்டு, நூல்) வழங்கிய பெருமக்கள், திருப்புகழ், மஸ்தான் சாகிபு பாடல் ஆகியவற்றை மக்கள் நாள் தோறும் உச்சரிக்கும் வகையில் தெருக்களுக்கு பெயர் எழுதி வைத்தார். தெருப்பெயர் அனைத்திலும் தமிழ் மணக்கிறது. காரைக்கால் புனிதவதியார் தெரு, தேவலோகத் தெரு, நற்செய்தியாளர் நால்வர் தெரு, பாரதிதாசன் தெரு, புதுமைப்பித்தன் தெரு என்று புலவர் பெருமக்கள் அனைவரையும் போற்றி மகிழ் கிறது நெல்லை.
தமிழ்த்தாய் வாழ்த்து தந்த பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனார் பெயரால் நெல்லையில் ஓர் பல்கலைக்கழகம் அமைந்திருக் கிறது. சமய நல்லிணக்கத்தை பேணிப் போற்றும் திருநகரமாகவும், கலைகள் பலவற்றையும் காத்து வளர்க்கும் களமாகவும், பல்வேறு தமிழ் அமைப்புகளால் தொடர்ந்து தமிழ் வளர்க்கும் திருத்தலமாகவும், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம், சிதம்பரனார் மணி மண்டபம், பாரதியார் மணிமண்டபம் போன்ற பெருமை தரும் அரங்குகள் அமையப்பெற்றதாகவும் முல்லை தமிழ் மணக்கும் மாவட்டமாக நெல்லை மிளிர்கிறது.

Next Story