தானிப்பாடி அருகே டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு


தானிப்பாடி அருகே டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 15 April 2017 4:30 AM IST (Updated: 14 April 2017 9:11 PM IST)
t-max-icont-min-icon

தானிப்பாடி அருகேயுள்ள கோவிந்தராஜபுரத்தில் சாலையோரம் டாஸ்மாக் கடை உள்ளது.

தண்டராம்பட்டு,

தானிப்பாடி அருகேயுள்ள கோவிந்தராஜபுரத்தில் சாலையோரம் டாஸ்மாக் கடை உள்ளது. அந்த கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அப்போது சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில்கள் ஏற்றிக்கொண்டு லாரி வந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை வேறுபகுதிக்கு மாற்றக்கோரி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு, மதுபாட்டில்கள் ஏற்றிவந்த லாரியை சிறைப்பிடித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தானிப்பாடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசார், டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். மேலும் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி, அங்கு மதுபாட்டில்கள் இறக்காமல் அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story