தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பூக்களை கொட்டி சிறப்பு அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமிதரிசனம்


தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பூக்களை கொட்டி சிறப்பு அபிஷேகம் திரளான பக்தர்கள் சாமிதரிசனம்
x
தினத்தந்தி 14 April 2017 10:32 PM IST (Updated: 14 April 2017 10:32 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 10 வகையான பூக்களை கொட்டி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். ஆஞ்சநேயர் கோவில் நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோ

நாமக்கல்,

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று இக் கோவிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பால், தயிர், பஞ்சாமிர்தம், எண்ணெய், சந்தனம் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து பட்டாச்சாரியர்கள் ஆஞ்சநேயருக்கு செவ்வந்தி, சம்பங்கி, அரளி, ரோஜா, தாமரை, மல்லிகை உள்ளிட்ட 10 வகையான் பூக்களை கொட்டி அபிஷேகம் செய்தனர்.

வெள்ளிக்கவசம்

பின்னர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்டம் மட்டும் இன்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story