திண்டிவனத்தில் ரூ.18 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் ஐகோர்ட்டு நீதிபதி திறந்து வைத்தார்


திண்டிவனத்தில் ரூ.18 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் ஐகோர்ட்டு நீதிபதி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 15 April 2017 4:15 AM IST (Updated: 14 April 2017 11:01 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் ரூ.18 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி திறந்து வைத்தார்.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் ரூ.18 கோடியே 18 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு தமிழக சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை தாங்கினார். கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன்நாயர், திண்டிவனம் பார் அசோசியே‌ஷன் தலைவர் சங்கரன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தேசிங்கு, வழக்கறிஞர்கள் நல சங்க தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை நீதிபதி சரோஜினிதேவி வரவேற்றார். திண்டிவனம் கூடுதல் அமர்வு நீதிபதிகள் பரணிதரன், செல்வமுத்துகுமாரி ஆகியோர் தொடக்க உரையாற்றினார்கள்.

சிறப்பு அழைப்பாளராக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நூட்டி.ராமமோகனராவ் கலந்து கொண்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். அப்போது அவர் பேசியதாவது:–

இணைப்பு பாலமாக...

புதிதாக திறக்கப்பட்ட நீதிமன்றத்தில் வழக்குகளை விரைந்து முடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை அறிந்து நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் அதிக விபத்துகள் ஏற்பட காரணம் கவனக்குறைவே. கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். மேலும் இம்மாவட்டத்தில் குற்றங்களும் அதிகமாக உள்ளது. இந்த குற்றங்களை குறைக்க அதிகளவில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட வேண்டும். வக்கீல்கள் தேவையற்ற வழக்குகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. நல்ல வழக்குகள் மீது கவனம் செலுத்த வேண்டும். நீதிமன்றத்திற்கும், மக்களுக்கும் வக்கீல்கள் இணைப்பு பாலமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாவட்ட உரிமையியல் நீதிபதி புகழேந்தி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி அருணாசலம், முதன்மை சார்பு நீதிபதி காய்த்ரி, குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டுகள் ஜெயசுதா, ராவூத்தம்மாள், திண்டிவனம் பார் அசோசியே‌ஷன் செயலாளர் பாலாஜி, திண்டிவனம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சிவகுமார், வழக்கறிஞர்கள் நல சங்க செயலாளர் கிருபாகரன், மூத்த வக்கீல்கள் தீனதயாளன், செல்வம், ராமமூர்த்தி, அருணகிரி, ஜெயக்குமார், ஆதித்தன், வக்கீல்கள் ராதாகிருஷ்ணன், வேலுமணி, கார்த்திக், ஜக்காம்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனர் ராம்குமார், மாவட்ட அரசு வக்கீல் பொன்சிவா, மாவட்ட ஜெயலலிதா பேரவை முன்னாள் செயலாளர் பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட குற்றவியல் நீதிபதி சுபாஅன்புமணி நன்றி கூறினார்.


Next Story