குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் சித்திரை விசு தீர்த்தவாரி திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்


குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் சித்திரை விசு தீர்த்தவாரி  திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 15 April 2017 4:30 AM IST (Updated: 14 April 2017 11:47 PM IST)
t-max-icont-min-icon

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் நேற்று சித்திரை விசு தீர்த்தவாரி நடந்தது.

தென்காசி,

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை விசு திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான சித்திரை விசு திருவிழா கடந்த 5–ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றன. இரவில் சுவாமி – அம்பாள் வீதி உலாவும் நடைபெற்றன.

கடந்த 9–ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 12–ம் தேதி சித்திரை சபையில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெற்றது.

தீர்த்தவாரி

திருவிழாவின் கடைசி நாளான நேற்று காலை சித்திரை விசு தீர்த்தவாரி நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மெயின் அருவியில் சுவாமி அம்பாள் தீர்த்தவாரி நடைபெற்றது. இதன் பிறகு வீதி உலா நடைபெற்றது.

தீர்த்தவாரி நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைய துறை நெல்லை இணை ஆணையர் லெட்சுமணன், உதவி ஆணையர் சாத்தையா, கோவில் நிர்வாக அதிகாரி கணேசன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story