சீமைக்கருவேல மரங்கள் இல்லாத மாவட்டமாக வேலூர் திகழ வேண்டும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி முரளிதரன் பேச்சு
சீமைக்கருவேல மரங்கள் இல்லாத மாவட்டமாக வேலூர் திகழ வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி முரளிதரன் கூறினார்.
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் விருந்தினர் மாளிகை கட்டுவதற்காக ரூ.1 கோடியே 85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆனந்தி தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நடராஜன், விரைவு கோர்ட்டு நீதிபதி லதா, தலைமை குற்றவியல் நீதிபதி தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி உமாமகேஷ்வரி வரவேற்றார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், வேலூர் மாவட்ட பொறுப்பு நீதிபதியுமான முரளிதரன் கலந்து கொண்டு விருந்தினர் மாளிகை கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார். மேலும், இதற்கான பெயர் பலகையையும் திறந்து வைத்தார்.
பின்னர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி முரளிதரன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
சீமைக்கருவேல மரங்கள்
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் தான் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியை நீதிபதிகள், வக்கீல்கள் தங்களின் அன்றாட பணிகளோடு சேர்த்து பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்கள். இதனை ஐகோர்ட்டு நீதிபதிகள் பாராட்டியுள்ளனர்.
வேலூர் கோர்ட்டில் வசூலிக்கப்படும் அபராத தொகையை சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிக்காக பயன்படுத்துவது பெருமைக்குரியதாக உள்ளது. சீமைக்கருவேல மரங்கள் இல்லாத மாவட்டமாக வேலூர் திகழ வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் மகளிர் கோர்ட்டு நீதிபதி மதுசூதனன், சார்பு நீதிபதி தாமோதரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மற்றும் நீதிபதிகள், வக்கீல்கள், போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலக அலுவலர் கேசவன் நன்றி கூறினார்.

Next Story