ஈரோட்டில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
தென் இந்தியர்களை கருப்பர்கள் என்று இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. முன்னாள் எம்பி. தருண் விஜயை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு,
தென் இந்தியர்களை கருப்பர்கள் என்று இழிவுபடுத்தி பேசிய பா.ஜ.க. முன்னாள் எம்பி. தருண் விஜயை கண்டித்தும், பா.ஜ.க.வினர் மதக்கலவரம், சாதிக்கலவரம் உருவாகும் வகையில் பேசி வருவதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திராவிடர் கழகத்தினர் ஈரோடு ஜவான்பவன் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத்தின் அமைப்பு செயலாளர் த.சண்முகம் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் நா.விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். பேராசிரியர் ப.காளிமுத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசையும், முன்னாள் எம்.பி. தருண் விஜயையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் திராவிடர் கழக மண்டல தலைவர் பிரகலாதன், மாவட்ட தலைவர்கள் நற்குணன், சீனிவாசன், சிற்றரசு, காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.