வியாபாரிகள் கொள்முதல் செய்யாததால் கருப்பு பன்னீர் திராட்சை விலை குறைவு


வியாபாரிகள் கொள்முதல் செய்யாததால் கருப்பு பன்னீர் திராட்சை விலை குறைவு
x
தினத்தந்தி 15 April 2017 4:15 AM IST (Updated: 15 April 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் கருப்பு பன்னீர் திராட்சை விலை குறைந்தது. இதனால் கிலோ ரூ.25–க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கம்பம்

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான காமயகவுண்டன்பட்டி, சுருளிபட்டி, நாராயணத்தேவன்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி, கூடலூர், அனுமந்தன்பட்டி, க.புதுப்பட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதியில் நெல், வாழை, தென்னை, விவசாயத்திற்கு அடுத்தபடியாக கருப்பு பன்னீர் திராட்சையை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

அதில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேல் திராட்சை விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் நிலவும் தட்பவெப்பம், தகுந்த மண்வளம் ஆகியவற்றால் திராட்சை விவசாயம் சிறப்பு பெற்று விளங்குகிறது. இங்கு விளையும் திராட்சை கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

கிலோ ரூ.25–க்கு விற்பனை

தற்போது இந்த பகுதியில் பகல் நேரத்தில் அனல் காற்று வீசுகிறது. வெயிலின் தாக்கமும் அதிகம் காணப்படுகிறது. இதனால் திராட்சை விளைச்சல் குறைந்து வருகிறது. இந்த நிலையில் விலையும் குறைந்து விட்டது. கடந்த ஆண்டு கோடை காலங்களில் ஒரு கிலோ திராட்சை ரூ.50–க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ ரூ.25–க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்ட போது, இந்த பகுதியில் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. பருவ மழை பொய்த்து போனதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விளையும் கருப்பு பன்னீர் திராட்சைக்கு போதிய விலை கிடைக்கவில்லை. வியாபாரிகள் கொள்முதல் செய்ய அதிகம் வரவில்லை. காரணம் கோடை காலத்தில் தர்ப்பூசணி, ஆரஞ்சு பழங்கள் விற்பனைக்கு அதிகம் வந்து குவிந்துள்ளன. இதனால் கருப்பு பன்னீர் திராட்சை மார்க்கெட்டில் குறைந்த அளவே விற்பனையாகிறது என்றனர்.


Next Story