உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 150 பயனாளிகளுக்கு உதவித்தொகை உதவி கலெக்டர் வழங்கினார்
தமிழக முதல்–அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2017–18–ம் ஆண்டுக்கான திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை
மயிலாடுதுறை,
தமிழக முதல்–அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2017–18–ம் ஆண்டுக்கான திருமண உதவித்தொகை மற்றும் இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை வழங்க மயிலாடுதுறை தாலுகா பகுதியில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி 150 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 150 பயனாளிகளுக்கு உதவி தொகைக்கான காசோலைகளை உதவி கலெக்டர் சுபாநந்தினி வழங்கினார். நிகழ்ச்சியில் தனி தாசில்தார் சங்கர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story