செம்பட்டி– பழனி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


செம்பட்டி– பழனி சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 April 2017 3:45 AM IST (Updated: 15 April 2017 12:41 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சுரைக்காய்பட்டியில் நேற்று கோவில் திருவிழா நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் மது அருந்திவிட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அருகே உள்ள கே.ராமநாதபுரத்தில் உள்ள ஒரு கோவில் மீது காலி மதுப

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சுரைக்காய்பட்டியில் நேற்று கோவில் திருவிழா நடந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் மது அருந்திவிட்டு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அருகே உள்ள கே.ராமநாதபுரத்தில் உள்ள ஒரு கோவில் மீது காலி மதுபாட்டில்களை வீசினர். மேலும், அங்கே நின்று கொண்டிருந்த மணிகண்டன் (வயது 35) என்பவர் மீதும் மதுபாட்டில்களை வீசினர். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே மதுபாட்டில்களை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செம்பட்டி போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். பின்னர் செம்பட்டி– பழனி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 இதுகுறித்து தகவலறிந்து வந்த ஒட்டன்சத்திரம் போலீஸ் துணை சூப்பிரண்டு வீரபாண்டி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story