திருப்பூரில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்


திருப்பூரில் திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 April 2017 4:00 AM IST (Updated: 15 April 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

தென்னாட்டு மக்களை கருப்பர்கள் என்று கூறிய முன்னாள் எம்.பி. தருண் விஜயை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

திருப்பூர்,

தென்னாட்டு மக்களை கருப்பர்கள் என்று கூறிய முன்னாள் எம்.பி. தருண் விஜயை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் குமரன் சிலை முன் நேற்று காலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். செயலாளர் யாழ் ஆறுச்சாமி வரவேற்றார். மாநகர தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் கருணாகரன், இளைஞர் அணி தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமை கழக பேச்சாளர் குமாரராஜா கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் எம்.பி. தருண் விஜய்க்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். முடிவில் மாவட்ட அமைப்பாளர் சிவசாமி நன்றி கூறினார்.


Next Story