3 தாலுகாக்களுக்கு ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வந்துள்ளன கலெக்டர் தகவல்


3 தாலுகாக்களுக்கு ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வந்துள்ளன கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 April 2017 4:30 AM IST (Updated: 15 April 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

3 தாலுகாக்களுக்கு ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வந்துள்ளன கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தகவல்

நாகர்கோவில்

குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

குமரி மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் முதல் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரே‌ஷன் கார்டுதாரர்கள், ஸ்மார் ரே‌ஷன் கார்டு பெறுவதற்கு ஏற்கனவே ரே‌ஷன் கடைகளில் பதிவு செய்த கைபேசி எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தியுடன் ஓ.டி.பி. நம்பர் அனுப்பப்படும். அந்த குறுஞ்செய்தியை கைபேசியிலிருந்து அழித்து விடக்கூடாது. கைபேசி எண்ணில் வரப்பெற்ற ஓ.டி.பி. நம்பர் 15 நாட்கள் வரை இருக்கும். இக்குறுஞ்செய்தி வரப்பெற்ற கைபேசியுடன் குடும்ப தலைவர் அல்லது 18 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ரே‌ஷன் கார்டில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆதார் எண் மற்றும் அசல் குடும்ப அட்டையுடன் வந்து ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டை பெற்று கொள்ளலாம்.

2–ம் கட்டமாக அகஸ்தீஸ்வரம், தோவாளை மற்றும் விளவங்கோடு தாலுகாக்களுக்கு ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டுகள் வந்துள்ளன. இந்த தாலுகாக்களைச் சேர்ந்த ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தியின் அடிப்படையில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு பெற்றுக்கொள்ளலாம். ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு பெற்றுக்கொள்ள 15 நாட்கள் அவகாசம் இருப்பதால் கூட்ட நெரிசலை தவிர்த்து பொறுமையுடன் சம்பந்தப்பட்ட ரே‌ஷன் கடைகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story