டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மக்கள் சேவை இயக்கத்தினர் மொட்டை அடித்து போராட்டம்


டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மக்கள் சேவை இயக்கத்தினர் மொட்டை அடித்து போராட்டம்
x
தினத்தந்தி 15 April 2017 5:30 AM IST (Updated: 15 April 2017 1:34 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அரியலூரில் மக்கள் சேவை இயக்கத்தினர் மொட்டை அடித்து போராட்டம் சாட்டையாலும் அடித்துக் கொண்டனர்

தாமரைக்குளம்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் சேவை இயக்கத்தினர் மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாட்டையாலும் அடித்துக் கொண்டனர்.

மொட்டையடித்து போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மொட்டையடிக்கும் போராட்டம் நடத்துவதற்காக அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மக்கள் சேவை இயக்கத்தினர் திரண்டனர். பின்னர் அவர்கள் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து மொட்டையடித்து கரும்புள்ளி, செம்புள்ளிகளை உடலில் குத்திக்கொண்டனர். பின்னர் முள்கிரீடம் அணிந்து சாட்டையால் தன்னைத்தானே அடித்து கொண்டு கோ‌ஷமிட்டனர்.

மாற்றுத்திறனாளி

மேலும் விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் குன்னம் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மதியழகனும் மொட்டை அடித்துக்கொண்டு போராட்டத்தில் பங்கேற்றார்.

போராட்டத்துக்கு, மக்கள் சேவை இயக்கத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய பிரிவு செயலர் பாலு,துணைச் செயலர் சச்சின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story