புதிதாக டாஸ்மாக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம்


புதிதாக டாஸ்மாக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 15 April 2017 1:38 AM IST (Updated: 15 April 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்டி தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 3,400 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதற்கு பதிலாக புதிய கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பள்ளி, மருத்துவமனை, குடியிருப்பு பகுதிகளில் டாஸ்மாக் கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்படுவதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள பெருங்குடியில் புதிய டாஸ்மாக்கடை திறக்க கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த கிராமமக்கள் புதிதாக டாஸ்மாக்கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர். இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கட்டிட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

முற்றுகை போராட்டம்

இதனை தொடர்ந்து பெருங்குடியில் டாஸ்மாக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் புதிதாக அமைக்கப்படும் கட்டிடத்தின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடையின் கட்டுமான பணிகளுக்காக வைத்திருந்த பொருட்களை தூக்கி எறிந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் இந்த பகுதியில் டாஸ்மாக்கடை அமைக்க விட மாட்டோம் என கோஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story