திருச்சி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


திருச்சி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 April 2017 5:00 AM IST (Updated: 15 April 2017 2:25 AM IST)
t-max-icont-min-icon

டி.முருங்கப்பட்டியில் திருச்சி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

உப்பிலியபுரம்,

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள டி.முருங்கப்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் அருகில் தளுகை ஊராட்சி மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உரிமம் ரத்து செய்த தனியார் வெடிமருந்து தொழிற்சாலைக்கு சீல் வைக்காதது, வெடிமருந்து தொழிற்சாலையினர் ஆக்கிரமிப்பு செய்துள்ள மண்மலை வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் பாதை, மந்தைவெளி நிலத்தை மீட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராதது, அனுமதி ரத்து செய்துள்ள தொழிற்சாலையில் பராமரிப்பு வேலை நடைபெறுவதை தடுத்து நிறுத்தாதது போன்றவற்றுக்காக மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், கிராம மக்கள் மீது பொய் வழக்கு போடுவதாக தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பினர்.


Next Story