காஞ்சீபுரம் அருகே கார் கவிழ்ந்து சென்னை சுங்க வரித்துறை அதிகாரி பலி
காஞ்சீபுரம் அருகே கார் கவிழ்ந்து சென்னை சுங்கவரித்துறை அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம்
சென்னை மேற்கு தாம்பரம் ஜோதி நகரை சேர்ந்தவர் பெத்துராஜ் (59). சுங்க வரித்துறை அதிகாரி. இவர் தனது காரில் வீட்டில் இருந்து மகள் பானுபிரியங்கா (27) என்பவருடன் நண்பரை பார்ப்பதற்காக பெங்களூருவுக்கு சென்றார். காரை பெத்துராஜ் ஓட்டிச் சென்றார். பெங்களூருவில் நண்பரை பார்த்துவிட்டு மீண்டும் கார் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.
சென்னை–பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பொன்னேரிக்கரை என்ற இடத்தில் வரும்போது திடீரென டயர் வெடித்து கார் கவிழ்ந்தது.
சாவுஇதில் சுங்கவரித்துறை அதிகாரி பெத்துராஜ், அவரது மகள் பானுபிரியங்கா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு பெத்துராஜை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது மகள் பானுபிரியங்கா படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.