திருவள்ளூர் அருகே வாகனம் மோதி கடைக்காரர் பலி


திருவள்ளூர் அருகே வாகனம் மோதி கடைக்காரர் பலி
x
தினத்தந்தி 15 April 2017 4:00 AM IST (Updated: 15 April 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே வாகனம் மோதி கடைக்காரர் பலியானார்.

திருவள்ளூர்

சிவகங்கை மாவட்டம் காலைப்பில்லன் கிராமத்தை சேர்ந்தவர் கங்கன் (வயது 65). இவர் திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூரில் உள்ள தனியார்நிறுவனம் அருகே கரும்பு ஜூஸ் கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு உதவியாக அவரது மகன் அலெக்சாண்டர் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கங்கன், அலெக்சாண்டர் இருவரும் சைக்கிளில் வேலையின் காரணமாக மேல்நல்லாத்தூரில் இருந்து மணவாளநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

சைக்கிளை கங்கன் ஓட்டிச்சென்றார். அலெக்சாண்டர் பின்னால் அமர்ந்து வந்தார். சிறிது து£ரம் சென்றதும் ஸ்ரீபெரும்புது£ரில் இருந்து திருவள்ளூர் நோக்கி வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

சாவு

இதில் கங்கன், அலெக்சாண்டர் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த கங்கன், மகன் கண் எதிரிலேயே பரிதாபமாக இறந்து போனார். அலெக்சாண்டர் காயமின்றி தப்பினார்.

இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்கனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்ற வாகன ஓட்டி யார்? என்று விசாரித்து வருகின்றனர்.


Next Story