மின்சாரம் தாக்கி அக்கா–தங்கை பலி: நில உரிமையாளர் கைது


மின்சாரம் தாக்கி அக்கா–தங்கை பலி: நில உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 15 April 2017 5:15 AM IST (Updated: 15 April 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

மின்சாரம் தாக்கி அக்கா–தங்கை பலியான வழக்கில் நில உரிமையாளர் கைது

பொன்னேரி,

பொன்னேரி அருகே உள்ள காட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு (வயது 35). இவரது மகள்கள் சவுமியா (8), ரம்யா (6). அவர்கள் 3–ம் வகுப்பு மற்றும் முதல் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்றுமுன்தினம் வீட்டின் அருகே விவசாய நிலத்தில் உள்ள பம்பு செட்டில் குளிப்பதற்காக சவுமியா, ரம்யா இருவரும் சென்றனர். அங்கு தொங்கிக் கொண்டிருந்த மின்கம்பியில் சிறுமிகளின் கை பட்டதால் மின்சாரம் தாக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து பொன்னேரி போலீசில் சந்துரு புகார் செய்தார். அதன்பேரில் மின்சார கம்பி செல்லும் இடத்தின் நில உரிமையாளர் முனுசாமி (60) என்பவரை போலீசார் கைது செய்து பொன்னேரி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

பொன்னேரி கிழக்கு மின்வாரிய அலுவலகத்தில் வேலை செய்யும் மின்வாரிய ஊழியர்களான செல்வம், சாமுவேல் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.


Next Story