தந்தை, மகனை தாக்கிய 3 பேர் கைது
திருவள்ளூர் அருகே தந்தை, மகனை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர்
திருவள்ளூரை அடுத்த வெள்ளக்குளத்தை சேர்ந்தவர் சாம்ராஜ். இவர் தன்னுடைய வீட்டுக்கு மின்இணைப்பு கொடுப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த எலெக்ட்ரீசியனான செல்வம் (50) என்பவரை அழைத்து வந்தார். செல்வம் தனக்கு உதவியாக தன்னுடைய மகன் மனோஜ் (24) என்பவரை உடன் அழைத்து வந்தார்.
அவர்கள் இருவரும் மின் இணைப்பு கொடுப்பதற்காக வீட்டுக்குள் சென்றபோது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முனுசாமி, அவரது மனைவி லட்சுமி, உறவினர்கள் குமார் (45), பேபி, தீனன்(37), எழிலரசன்(30), சுஜாதா ஆகியோர் வீட்டுக்கு மின்இணைப்பு கொடுக்கக்கூடாது என்று தகராறு செய்து இருவரையும் தகாத வார்த்தையால் பேசி கையாலும், உருட்டுக்கட்டையாலும் தாக்கினார்கள்.
கைதுஇதில் பலத்த காயம் அடைந்த மனோஜ் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். செல்வம் லேசான காயம் அடைந்தார். இது குறித்து செல்வம் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாரதி வழக்குப்பதிவு செய்து குமார், தீனன், எழிலரசன் ஆகியோரை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள முனுசாமி, லட்சுமி, பேபி, சுஜாதா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.