தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்பில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்கள் கலந்தாய்வு மூலமே நிரப்பப்படும்


தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்பில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்கள் கலந்தாய்வு மூலமே நிரப்பப்படும்
x
தினத்தந்தி 15 April 2017 4:15 AM IST (Updated: 15 April 2017 3:16 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மேற்படிப்பில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்கள் கலந்தாய்வு மூலமே நிரப்பப்படும் அகில இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

புதுச்சேரி

புதுவை மட்டுமல்லாமல் தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலங்களில் இந்த ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மேல்படிப்பில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான இடங்களுக்கு பொது கலந்தாய்வு கிடையாது. கல்லூரிகளே மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என்று அகில இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்ததாக வாட்ஸ்–அப் மற்றும் குறுஞ்செய்திகள் பரவின.

இது குறித்து புதுவை பெற்றோர் மாணவர் சங்கம், மற்றும் தமிழக மருத்துவ மாணவர் சங்கம், கர்நாடக உயர்கல்வி மருத்துவ மாணவர் அமைப்பு சார்பில் அகில இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு புகார் அனுப்பப்பட்டது.

இந்தநிலையில் அகில இந்திய மருத்துவ கவுன்சில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 11–ந் தேதி அகில இந்திய மருத்துவ கவுன்சிலின் பேரில் சில விரும்ப தகாத நபர்களால் வாட்ஸ்–அப், மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் வெளியிடப்பட்ட அனைத்து தகவல்களும் தவறானவை. அதில் உள்நோக்கத்தோடு யாரோ சிலரால் போலியான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மேற்படிப்பில் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான இடங்கள் பொதுக்கலந்தாய்வு மூலமே நிரப்பப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story