சிட்லபாக்கம் குப்பை கிடங்கில் தீ விபத்து


சிட்லபாக்கம் குப்பை கிடங்கில் தீ விபத்து
x
தினத்தந்தி 15 April 2017 4:23 AM IST (Updated: 15 April 2017 4:23 AM IST)
t-max-icont-min-icon

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பேரூராட்சி குப்பை கிடங்கு, சிட்லபாக்கம் பெரிய ஏரி அருகில் உள்ளது.

தாம்பரம்

தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பேரூராட்சி குப்பை கிடங்கு, சிட்லபாக்கம் பெரிய ஏரி அருகில் உள்ளது. இதை சுற்றி அரசு பள்ளிகள், போலீஸ் நிலையம், குடியிருப்புகள் உள்ளன. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவி துர்நாற்றத்துடன் காற்றில் கலப்பதால் அப்பகுதி மக்கள் சுவாசக்கோளாறு, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனால் ஏரி நீரும் மாசடைந்து வருகிறது. இந்த குப்பை கிடங்கில் கடந்த சில மாதங்களில் பலமுறை தீ விபத்து ஏற்பட்டு ஏரியை சுற்றி உள்ள பகுதி மக்களுக்கு வாந்தி, மயக்கம், சுவாச பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை மீண்டும் இந்த குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் கரும்புகை சூழ்ந்தது. இதனால் வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து குப்பைகளில் எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

தாம்பரம் நகராட்சி உள்பட மற்ற பகுதிகளில் உள்ளது போல சிட்லபாக்கம் பேரூராட்சி குப்பை கிடங்கிலும் முன்னெச்சரிக்கையாக தீ தடுப்பு நடவடிக்கைகளை பேரூராட்சி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். குப்பை கிடங்கின் உள்ளே வெளிநபர்கள் நுழைவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story