சென்னையில், பிரபல டாக்டர் வீட்டில் கொள்ளை
சென்னையில், பிரபல டாக்டர் வீட்டில் கொள்ளை 100 பவுன் நகைகள் கொள்ளை போனதா? போலீசார் விசாரணை
சென்னை
சென்னை அபிராமபுரத்தில் பிரபல டாக்டர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 100 பவுன் நகைகள் கொள்ளை போனதா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இருதய சிகிச்சை நிபுணர்
சென்னை அபிராமபுரம், பிஷப் கார்டன் பகுதியில் வசிப்பவர் மேத்யூசாமுவேல் (வயது 54). பிரபல இருதய நோய் சிகிச்சை நிபுணரான இவர், சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். மும்பையிலும் இவர் கிளினிக் நடத்தி வருகிறார். இவரது மகன் வக்கீலாக இருக்கிறார். மகள் திருமணமாகி அமெரிக்காவில் வாழ்கிறார்.
டாக்டர் மேத்யூ வீட்டை பூட்டிவிட்டு மும்பை சென்றிருந்தார். நேற்றுமுன்தினம் இவரது வீட்டுக்கு உறவினர்கள் வந்தனர். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தனர். உடனே மும்பையில் இருந்த மேத்யூவுக்கு இதுபற்றி தகவல் கொடுத்தனர். அவர் சென்னை விரைந்து வந்தார்.
100 பவுன் நகைகள்?
அபிராமபுரம் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இணை கமிஷனர் மனோகரன் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்டது.
டாக்டர் மேத்யூ வீட்டில், 100 பவுன் தங்க, வைர நகைகள் கொள்ளைபோய்விட்டதாக தகவல் வெளியானது. ஆனால் நகைகள் எதுவும் பெரிய அளவில் கொள்ளை போகவில்லை என்றும், நகைகள் லாக்கரில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு தங்க சங்கிலி உள்பட சிறிய அளவிலேயே நகை திருட்டுபோய் இருக்கிறது என்றும் டாக்டர் மேத்யூ தெரிவித்துள்ளதாக, கூடுதல் கமிஷனர் மனோகரன் கூறினார்.
இருந்தாலும் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story