கும்பள்ளி கிராமத்தில் கரும்பு தோட்டத்தில் புகுந்து 4 காட்டு யானைகள் அட்டகாசம்
கும்பள்ளி கிராமத்தில் உள்ள ஒரு கரும்பு தோட்டத்தில் புகுந்த 4 காட்டு யானைகள் அங்குள்ள கரும்பு பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.
கொள்ளேகால்,
சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகா கிருஷ்ணயன கட்டே அருகே உள்ள கும்பள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் இந்த கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டுயானைகள், கும்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தன. அவைகள் அங்குள்ள சிவசங்கரப்பா என்ற விவசாயிக்கு சொந்தமான கரும்பு தேட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து அட்டகாசம் செய்தன.
கோரிக்கை
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து மேளங்கள் அடித்தும், பட்டாசுகள் வெடித்தும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த பிளிகிரிரெங்கண பெட்டா வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது தொடர் அட்டகாசம் செய்துவரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயி சிவசங்கரப்பாவுக்கு நிவராண நிதி வழங்க வேண்டும் என்றும் அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற வனத் துறையினர் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு அரசிடம் பேசி நிவாரணம் வாங்கி தருவதாகவும் உறுதி அளித்தனர்.

Next Story