ஹலகூர் அருகே காரை திருடி தீவைத்து எரிப்பு மர்ம நபரை போலீஸ் தேடுகிறது
ஹலகூர் அருகே காரை திருடி தீவைத்து எரித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
ஹலகூர்,
மண்டியா மாவட்டம் ஹலகூர் அருகே ஜூகனஹள்ளி கிராமத்தில் இருந்து பெனமனஹள்ளி கிராமம் செல்லும் சாலையில், கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென அந்தக் காரை சாலையோரம் நிறுத்திய மர்மநபர், காரில் இருந்து இறங்கினார். பின்னர் கார் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்த அந்த மர்ம நபர், அங்கு வந்த மற்றொரு காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டார்.
அதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து ஹலகூர் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதற்கிடையே தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து, காரில் எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் கார், முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் குறித்து ஹலகூர் போலீசார் விசாரித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், யாரோ மர்ம நபர் காரை வேறொரு இடத்தில் இருந்து திருடி, இங்கு கொண்டு வந்து தீயிட்டு எரித்தது தெரியவந்துள்ளது. மேலும் அந்தக்காரின் எண்ணையும் போலீசாரால் கண்டறிய முடியவில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் காருக்கு தீவைத்த மர்ம நபரையும் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story