கார் மோதி பெண் பலியான வழக்கில் டிரைவருக்கு 1 ஆண்டு ஜெயில்
மும்பை குர்லாவை சேர்ந்த பெண் சுக்ராபாய். இவர் தனது மகன் அப்துல் என்பவருடன் கடந்த 2000-ம் ஆண்டு ஹாலவ் மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.
மும்பை,
மும்பை குர்லாவை சேர்ந்த பெண் சுக்ராபாய். இவர் தனது மகன் அப்துல் என்பவருடன் கடந்த 2000-ம் ஆண்டு ஹாலவ் மேம்பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுக்ராபாய் பலியானார். மேலும் அவரது மகன் அப்துல் காயமடைந்தார். இது குறித்து குர்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய விமல்ஜன் (வயது46) என்பவரை கைது செய்தனர். மேலும் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். செசன்ஸ் கோர்ட்டு விமன்ஜனை விடுதலை செய்தது.
இதை எதிர்த்து சுக்ராபாயின் குடும்பத்தினர் ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, செசன்ஸ் கோர்ட்டு உத்தரவை ரத்து செய்து டிரைவர் விமல்ஜனுக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

Next Story