மேற்கு விரைவு சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து கடும் போக்குவரத்து நெரிசல்


மேற்கு விரைவு சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து கடும் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 15 April 2017 5:15 AM IST (Updated: 15 April 2017 5:15 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு விரைவு சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்த விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மும்பை,

மும்பையில் இருந்து போரிவிலி நோக்கி டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த லாரி பகல் 12 மணியளவில் காந்திவிலி, சாம்தாநகர் பகுதியில் உள்ள மேற்கு விரைவு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென லாரியின் முன்சக்கரம் கழன்று ஓடியது. இதனால் லாரி ரோட்டில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லாரியின் டிரைவரும், கிளனரும் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ரோட்டில் கவிழ்ந்து கிடந்த லாரியை கிரேன் மூலம் அகற்றினர்.

போக்குவரத்து நெரிசல்

இந்த விபத்தால் நேற்று மதியம் மேற்கு விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அந்தேரியில் இருந்து காந்திவிலிவரை அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல சயான் கிங் சர்க்கிள் பகுதியில் பால்வேன் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்திலும் டிரைவர், கிளனர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

Next Story