தவறு செய்யும் அதிகாரிகளுக்கு தேவேந்திர பட்னாவிஸ் எச்சரிக்கை
முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் இருந்தவாறு ‘வீடியோ கான்பெரன்ஸ்’ வாயிலாக தொடங்கி வைத்தார்.
மும்பை,
பல்வேறு நகராட்சிகளில் 28 வளர்ச்சி திட்டங்களை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மும்பையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் இருந்தவாறு ‘வீடியோ கான்பெரன்ஸ்’ வாயிலாக தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அவர் பேசுகையில் கூறியதாவது:-
வளர்ச்சி பணிகள் குறித்த காலத்தில், செலவு அதிகரிக்காமல் முடிவடைய வேண்டும். நகராட்சி மேற்கொள்ளும் வளர்ச்சி பணிகளின் தரம் மோசமானதாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் வருகின்றன. இப்போது, இந்த வளர்ச்சி பணிகளுக்கான பொறுப்பு நகராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகளை சாரும்.
பணிகளின் தரத்தில் சமரசம் கூடாது. இதனை அவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். எந்த நிலையில் உள்ள அதிகாரி ஆனாலும் சரி, தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்.
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.

Next Story