இரும்பு மனிதர் ‘புரூஸ் லீ’ : 4. புரூஸ் லீயின் எதிரிகள்..!
புரூஸ் லீக்கு, எல்லா திசையிலும் நண்பர்கள் இருந்ததுபோலவே எதிரிகளும் இருந்தனர்.
புரூஸ் லீக்கு, எல்லா திசையிலும் நண்பர்கள் இருந்ததுபோலவே எதிரிகளும் இருந்தனர். அமெரிக்காவின் சீனா டவுன், ஹாங்காங், ஹாலிவுட் வட்டாரம் என பெரிய எதிரி கூட்டத்தையே அவர் சம்பாதித்து வைத்திருந்தார்.
ரவுடி கூட்டத்து தலைவனாக இருந்தது முதல் ஹாலிவுட் நடிகராக சண்டை காட்சிகளில் நடித்தது வரை திரும்பிய திசை எல்லாம் எதிரிகளின் முகமாகவே தெரிந்தது. ஆம்..! ஹாங்காங்கில் இருந்த சமயத்தில், பிரபல ரவுடியின் மகனை நடுரோட்டில் புரட்டி எடுத்தார். அதுவரை கோபக்கார பொடியனாக இருந்த புரூஸ் லீ, இந்த சம்பவத்திற்கு பின்னரே முரட்டு காளையாக உருவெடுத்து தனக்கான ரவுடி கூட்டத்தை கூட்டினார். ஒருசில மாதங்களிலேயே ரவுடி கும்பலுக்கு தலைவனாகவும் மாறினார். புரூஸ் லீயின் வளர்ச்சி ஹாங்காங் ரவுடிகளுக்கு எரிச்சலை கிளப்ப, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். இந்த விஷயம் புரூஸ் லீயின் பெற்றோருக்கு தெரிய வர, அவரை பெரும்பாடுபட்டு அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தனர்.
அமெரிக்கா வந்து இறங்கியவர்... நண்பர் நடத்தி வந்த சீன ஓட்டலில் வேலைப் பார்த்தப்படியே, சினிமா வாய்ப்புகளை தேடிவந்தார். அந்தசமயத்தில் தான் வம்பு சண்டை, புரூஸ் லீயை தேடி சைக்கிள் ரூபத்தில் வந்தது. 15–க்கும் மேற்பட்ட சைக்கிள்களில் ஒன்றாக வந்தவர்கள், சைக்கிளை ஓட்டலின் வாசலிலேயே நிறுத்தி விட்டு சாலையில் நின்று கொண்டிருந்தனர். இதற்கு புரூஸ் லீ எதிர்ப்பு தெரிவிக்க... வாக்குவாதம், கைகலப்பாக மாறி... அடிதடி, கத்திகுத்து வரை சென்றது. அதிர்ஷ்டவசமாக புரூஸ் லீ தப்பித்துவிட்டார். இந்த சம்பவத்துக்கு பின் புரூஸ் லீ, தற்காப்பு கலையை பயிற்றுவிக்கும் வேலைகளில் இறங்கினார். அடிக்கடி சாலைகளில் அடிதடி வகுப்புகளும் நடைபெற்று வந்தன. அந்த சமயத்தில் அமெரிக்கர்களுக்கு குங்பூ கற்றுதருவதை விரும்பாத சில தற்காப்பு அமைப்புகள்... புரூஸ் லீயிடம் வம்பிழுத்தனர். முதலில் புரூஸ் லீ அமைதியாக இருந்தார். ஒருநாள் மாலை பயிற்சி வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அதே கும்பல் அவரிடம் சவால் விட்டனர்.
‘‘மிஸ்டர் லீ’, குங்பூ கலையை அமெரிக்கர்களுக்கு சொல்லி தருவதை நாங்கள் விரும்பவில்லை. சீனர்களைத் தவிர மற்றவர்களுக்கு குங்பூ கற்றுக் கொடுக்காதீர்கள்’’ என்று மிரட்டியதோடு... புரூஸ் லீயை வம்புக்கும் இழுத்தனர். புரூஸ் லீ அவர்களது பேச்சை காது கொடுத்து கேட்கவில்லை. இதனால் கடுப்பானவர்கள்.... ‘‘ஒன்னு நீ இந்த ஊரில் இருக்கவேண்டும். இல்லை நாங்கள் இருக்கவேண்டும். அதை சண்டையின் மூலம் முடிவு செய்துவிடலாம்’’ என்று கோதாவில் இறங்க சொன்னார்கள். அவர்களின் சவாலை ஏற்றுக்கொண்ட லீ, சண்டைக்கு தயாராகினார். அடுத்தநாள் சிங்கத்தை அதன் குகையிலேயே சந்தித்தார். எதிரியின் குத்துகளை எளிதாக தடுத்தார். கிட்டத்தட்ட சோர்ந்துபோன எதிரிக்கு திடீரென பலமான அடி ஒன்று விழுந்தது. அவ்வளவு தான் எதிரி கிறுகிறுத்து போய் தலைக்குப்புற கீழே விழ... புரூஸ் லீயின் மதிப்பும், மரியாதையும் உயர்ந்தது. அவனிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் எல்லாம் புரூஸ் லீயை குருவாக ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வு சீனா டவுனில் கோலோச்சி வந்த சீன ரவுடிகளை பெரிதும் பாதித்தது. அதுவரை ரவுடிகளுக்கு கப்பம் கட்டிவந்த கடைக்காரர்கள்... புரூஸ் லீயின் தைரியத்தை சுட்டிக்காட்டி தரமறுத்தனர். சிலர் புரூஸ் லீயின் தற்காப்பு பயிற்சி முகாமில் சேர்ந்து மறைமுகமாக பாதுகாப்பு தேடிக் கொண்டனர். இதனால் கடுப்பாகிப்போனவர்கள் புரூஸ் லீயை பழிவாங்கும் தருணத்தை எதிர்நோக்கி இருந்தனர். அதுமட்டுமில்லாமல் புரூஸ் லீயும் சீன ரவுடிகளுக்கு கப்பம் கட்ட மறுத்தார்.
இப்படி ஊருக்குள் பல எதிரிகளை உருவாக்கிவிட்டதுடன், ஹாலிவுட்டிலும் சில எதிரிகளை சம்பாதிக்க தொடங்கினார். அதுவும் சண்டை பயிற்சி என்ற பெயரில். புரூஸ் லீ கதாநாயகனாக நடித்த படங்களில்தத்ரூபமான சண்டை காட்சிகள் இடம்பிடித்திருக்கும். ஏனெனில் சகக் கலைஞர்களை அடிப்பது போன்று நடிக்காமல்... உண்மையாகவே அடித்து நொருக்கி விடுவார். இவரிடம் அடி வாங்க முடியாமல், சினிமாவிலிருந்து விலகி சென்றவர்களின் வரலாறும், ஹாலிவுட்டில் எழுதப்பட்டிருக்கிறது. அந்தளவிற்கு புரூஸ் லீயின் ஒவ்வொரு அடியும், இடி மாதிரி இறங்கும். இந்த பாணி... புகழ்பெற்ற ஹாலிவுட் சண்டை கலைஞர் களையும் விட்டுவைக்கவில்லை. அதுவரை சண்டை பயிற்சியாளர்களாக இருந்தவர்கள் புரூஸ் லீயின் வருகையால் ஸ்டண்ட் கலைஞர்களாக மாறினர். கொடுமையிலும், கொடுமையாக... புரூஸ் லீயின் கையால் அடி, உதை வாங்கினர். இப்படி ஹாலிவுட்டில் மதிப்பை இழந்த ஸ்டண்ட் கலைஞர்கள் எல்லாம் ஒன்றிணைந்து புரூஸ் லீயை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதற்காக இத்தாலியை சேர்ந்த மாபியா கும்பலிடம் பேரம் பேசியதாகவும், அது தோல்வியில் முடிவடைந்ததாகவும்... அமெரிக்காவின் பிரபல வார இதழில் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால்அந்த செய்தி வார இதழில் வருவதற்கு முன்பே புரூஸ் லீ இறந்துபோனார். அவர் வாழ்ந்த காலகட்டத்தில்... இன்னும் பலரையும் எதிரியாக சம்பாதித்து வைத்திருந்தார். ஆனால் இப்படி முளைத்த எதிரிகளால், புரூஸ் லீயை நெருங் கக்கூட முடியவில்லை.
‘‘கோபமும், ஆக்ரோஷமுமே மனிதனின் முதல் எதிரி’’ என்று கூறியவர்... அவை தனக்குள் ஒளிந்திருப்பதை கண்டுபிடிக்க தவறிவிட்டார். அவரது இறப்பு பலவிதமான சந்தேகங்களை கிளப்பிவிட்டாலும் அவரது கோபமும், ஆக்ரோஷமுமே இன்று வரை நம்பப்படும் எதிரிகள். எல்லை மீறிய கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் அடித்து நொருக்கியிருந்தால் மனிதர் நிச்சயம் புகழ் உச்சியில் வெற்றி கொடி நாட்டியிருப்பார். பரவாயில்லை...! அவர் நடித்திருக்கும் ஒருசில திரைப்படங்களே அவரது திறமைக்கு சாட்சியம் பகிர்கின்றன.
இப்படி ஊர் முழுக்க எதிரிகளை சம்பாதித்த புரூஸ் லீ... ஒருசில நண்பர்களையும் சம்பாதித்தார். அதில் ஜேம்ஸ் பாண்ட் கதாநாயகனான சீன் கானெரி மட்டும் வில்லனாக இருந்து நண்பனாக மாறியவர். ஆம்...!, அந்த காலகட்டங்களில் ஹாலிவுட்டின் ஆக்ஷன் நாயகனான ஜேம்ஸ் பாண்டிற்கு, புரூஸ் லீ கடும் போட்டியாக உருவெடுத்தார். அதனால் சீன் கானெரியின் எண்ணத்தில் புரூஸ் லீ எதிரியாக மாறினார். பின்னர் புரூஸ் லீயின் சுபாவமும், கடின உழைப்பும் சீன் கானெரியை நண்பராக மாற்றியது. இவருடன் புரூஸ் லீக்கு வேறு சில நண்பர்களும் இருந்தனர். இளம் நடிகராக அறிமுகமான ஜாக்கிசான், ஜேம்ஸ் காபர்ன், ஸ்டீவ் மெக்குயின், கரீம் அப்தும் காபர்.... என தெரிந்த முகங்களுடன் சில தெரியாத முகங் களும் இருந்தனர்.
அவர்களது வாழ்வில் புரூஸ் லீ எப்படி அறிமுகமானார் என்பதையும், புரூஸ் லீக்கு கிடைத்த கவுரவ மரியாதைகளையும் அடுத்த வாரம் பார்க்கலாம்..!
–தொடரும்

Next Story