கல்பட்டு கிராமத்தில் காளைவிடும் திருவிழா
கண்ணமங்கலம் அருகேயுள்ள கல்பட்டு கிராமத்தில் காளைவிடும் திருவிழா நேற்று நடந்தது.
கண்ணமங்கலம்,
கண்ணமங்கலம் அருகேயுள்ள கல்பட்டு கிராமத்தில் காளைவிடும் திருவிழா நேற்று நடந்தது. இதில் கல்பட்டு, கண்ணமங்கலம், சந்தவாசல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான காளைகள் கலந்து கொண்டன.
விழாவில் ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் ஓட விடப்பட்டன. இதில் வேகமாக ஓடி காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக 33 ஆயிரத்து 333 ரூபாயும், 2–ம் இடம் பிடித்த காளையின் உரிமையாளருக்கு 27 ஆயிரத்து 777 ரூபாயும், 3–ம் இடம் பிடித்த காளையின் உரிமையாளருக்கு 22 ஆயிரத்து 222 ரூபாயும் மற்றும் 37 காளைகளின் உரிமையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் கண்ணமங்கலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஏற்பாடுகளை பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
Next Story