அஞ்செட்டி பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் 4 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம் அதிகாரி தகவல்


அஞ்செட்டி பகுதிகளில் ஒருநாள் விட்டு ஒருநாள் 4 மணி நேரம் மின்சாரம் நிறுத்தம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 16 April 2017 4:15 AM IST (Updated: 15 April 2017 7:36 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

ஓசூர்

ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த அஞ்செட்டி பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட மின் பாதைகளில் சிறிய அளவிலான பழைய மின் கம்பிகளை மாற்றி விட்டு, அதிக திறன் கொண்ட புதிய மின் கம்பிகளை மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. எனவே நாளை(திங்கட்கிழமை) முதல் 26–ந் தேதி வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள், காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் 3 மணி அல்லது 4 மணி நேரம் அஞ்செட்டி, வண்ணத்திப்பட்டி, சாட்டனபள்ளி, மரியாளம், சீங்குட்டை, சித்தாண்டபுரம், ஏ.புதூர், சம்சனபள்ளி, தேவன்தொட்டி, நாவனட்டி, ஏறுமுத்தனபள்ளி, பையில்காடு, தக்கட்டி, ஓபிபுரம், உரிகம், கோவள்ளி, உடுப்பிராணி, பில்லிகல், கோட்டையூர், அர்த்தக்கல், மல்லஹள்ளி, பேல்பட்டி, மஞ்சுகொண்டபள்ளி, கெத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story