மணல் திருட்டை தடுக்க நம்பியாற்றின் கரையில் 1½ கி.மீ தூரத்துக்கு பள்ளம்
மணல் திருட்டை தடுப்பதற்காக நம்பியாற்றின் கரையில் 1½ கி.மீ தூரத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
திசையன்விளை,
மணல் திருட்டை தடுப்பதற்காக நம்பியாற்றின் கரையில் 1½ கி.மீ தூரத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
மணல் திருட்டுநெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகாவில் அடிக்கடி சட்டவிரோதமாக ஆற்று மணல், தேரி மணல் திருட்டு நடைபெறுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனை தடுப்பதற்காக அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு, மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழுவில் ராதாபுரம் தாசில்தார் ரவிகுமார் தலைமையில் துணை தாசில்தார்கள் அமிர்தராஜ், ரகுமத்துல்லா, ரமேஷ், வருவாய் அதிகாரிகள் கொம்பையா, குமார், ரமேஷ், திசையன்விளை கிராம நிர்வாக அலுவலர் குமார் மற்றும் கிராம நிர்வாகிகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவின் நடவடிக்கையால், நம்பியாற்றின் அணைக்கரை பகுதியில் மணல் திருட்டை தடுக்கும் பொருட்டு பெருங்குளத்தில் இருந்து அணைக்கரை வரை பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 1½ கிலோமீட்டர் தூரம் வரை 3 அடி ஆழத்தில் பள்ளம் (கால்வாய்) தோண்டப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தில்....இதன் மூலம் இருசக்கர வாகனம் மற்றும் 4 சக்கர வாகனங்களில் மணல் திருட்டை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நம்பியாற்றின் கரை முழுவதும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால் அருகில் உள்ள பட்டாநில உரிமையாளர்களுக்கு ஆற்றின் ஓரம் முள்வேலி அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள், திருட்டு மணல் வாங்குபவர்கள், ஏஜெண்டுகள் மீது காவல் துறை மூலம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.