காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம்
களக்காடு நகர காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் களக்காட்டில் நடந்தது. நகர தலைவர் தேவசகாயம் தலைமை தாங்கினார்.
களக்காடு,
களக்காடு நகர காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் களக்காட்டில் நடந்தது. நகர தலைவர் தேவசகாயம் தலைமை தாங்கினார். நகர பொது செயலாளர்கள் ஆறுமுகம், துரைராஜ், நகர துணை செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. வசந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை, நெல்லை மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நகர பொருளாளர் வேலாயுதம், செல்வராஜ், துரை, குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தூர்ந்து போன குளங்கள் மற்றும் கால்வாய்களை தூர் வார வேண்டும். குறுகிய பாலங்களை அகலப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story