ஜெயிலர் பணிக்கான எழுத்து தேர்வு
ஜெயிலர் பணிக்கான எழுத்துத்தேர்வு நெல்லையில் நேற்று 2 இடங்களில் நடந்தது.
நெல்லை.
ஜெயிலர் பணிக்கான எழுத்துத்தேர்வு நெல்லையில் நேற்று 2 இடங்களில் நடந்தது.
ஜெயிலர் பணிதமிழக சிறைத்துறையில் காலியாக உள்ள ஜெயிலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்படுகின்றன. இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் 27–ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், தஞ்சாவூர், திருச்சி, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இதற்கான எழுத்துத் தேர்வு நேற்று நடந்தது.
702 பேர்நெல்லை மாவட்டத்தில் இந்த தேர்வுக்கு 702 பேர் விண்ணப்பித்து இருந்தனர். பாளையங்கோட்டை சேவியர் மேல்நிலைப்பள்ளி, நெல்லை டவுன் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு 2 தாள்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் முதல் தாளும், மதியம் 2½ மணியில் இருந்து மாலை 5½ மணி வரை இரண்டாம் தாளுக்கான தேர்வும் நடத்தப்பட்டது.
நெல்லை டவுன் கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலையில் நடந்த தேர்வை 194 பேரும், மாலையில் நடந்த தேர்வை 198 பேரும் எழுதவில்லை. சேவியர் மேல்நிலைப்பள்ளியில் காலையில் நடந்த தேர்வை 139 பேரும், மாலையில் நடந்த தேர்வை 142 பேரும் எழுதவில்லை.
தேர்வு மையங்களுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் நேரில் சென்று பார்வையிட்டார். அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரிகளுக்கும் தேர்வு கண்காணித்தனர்.