உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தீர்த்தவாரி


உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தீர்த்தவாரி
x
தினத்தந்தி 16 April 2017 1:00 AM IST (Updated: 15 April 2017 11:16 PM IST)
t-max-icont-min-icon

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தீர்த்தவாரி

திசையன்விளை,

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம், உதயமார்த்தாண்ட பூஜை நடந்தது. கோவிலில் இருந்து அஸ்திரதேவர் பல்லக்கில் பட்டு குடை பிடித்து மேளதாளம் முழங்க உவரி கடலுக்கு சென்று புனித நீராடினார். பின்னர் தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அவருக்கு பல்வேறு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் பல்லக்கில் காட்சி அளித்தவாறு கோவிலை வந்தடைந்தார்.

கோவிலில் சுயம்புலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜை, அன்னதானம் நடந்தது. மாலையில் சாயரட்சை சிறப்பு அபிஷேகம், பூஜையும், இரவு சுவாமிக்கு பல்வேறு உபசாரங்களுடன் சிறப்பு தீபாராதனை, சுவாமி சந்திரசேகர், மனோன்மணி அம்பிகை சட்டம் கால் சப்பரத்தில் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்து இருந்தார்.


Next Story