மீன்பிடி தடைகாலம் தொடங்கியது; விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை


மீன்பிடி தடைகாலம் தொடங்கியது; விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 16 April 2017 2:30 AM IST (Updated: 15 April 2017 11:54 PM IST)
t-max-icont-min-icon

மீன்பிடி தடைகாலம் நேற்று தொடங்கியதால் தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

தூத்துக்குடி,

மீன்பிடி தடைகாலம் நேற்று தொடங்கியதால் தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

இனப்பெருக்க காலம்

தமிழ்நாட்டில் மீன்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் ஆகும். இந்த நாட்களில் அதிக அளவில் மீன் பிடிப்பதால் மீன் வளம் குறைந்து வந்தது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலமான 45 நாட்கள் விசைப்படகு, இழுவைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.

இந்த ஆண்டும் நேற்று முதல் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. நேற்று முதல் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது.

415 படகுகள்

இதனால் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 270 விசைப்படகுகளும், வேம்பாரில் 25 விசைப்படகுகளும், தருவைகுளத்தில் 120 விசைப்படகுகள் என மொத்தம் 415 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை.

இதனால் விசைப்படகு மீனவர்கள் படகுகளில் உள்ள பழுதுகளை நீக்குதல், வலைகளை சரிசெய்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விசைப்படகுகள் கடலுக்கு செல்லாததால் மீன்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் மீன்களின் விலை உயரும் வாய்ப்புள்ளது.


Next Story