முள்ளக்காட்டில் குடிநீர் குழாயில் திடீர் உடைப்பு; குளம் போன்று தண்ணீர் தேங்கியது
தூத்துக்குடி மாவட்டம் இருவப்பபுரம் பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, அங்கு இருந்து குழாய்கள் மூலம் முள்ளக்காடு காந்திநகர் பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. பின்னர் குழாய்கள் மூலம்
ஸ்பிக்நகர்,
தூத்துக்குடி மாவட்டம் இருவப்பபுரம் பகுதியில் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, அங்கு இருந்து குழாய்கள் மூலம் முள்ளக்காடு காந்திநகர் பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு குடிநீர் கொண்டு வரப்படுகிறது. பின்னர் குழாய்கள் மூலம் முள்ளக்காடு, எம்.சவேரியர்புரம், கீதாநகர், முத்தையாபுரம் மற்றும் கால்டுவெல் காலனி பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முள்ளக்காடு பகுதியில் சென்ற குடிநீர் குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டது. இதனால் வெளியேறி குடிநீர் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் குளம் போன்று தேங்கியது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் வினியோகத்தை நிறுத்திவிட்டு, குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்தனர்.
Next Story