பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 16 April 2017 4:15 AM IST (Updated: 16 April 2017 1:00 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் நாம் தமிழர் கட்சியினர் உண்ணாவிரதம்

மலைக்கோட்டை,

திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. டெல்லியில் கடந்த 30 நாட்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளின் கடன்கள் முழுவதையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் வக்கீல் பிரபு தலைமை தாங்கி னார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது, விவசாயிகளுக்கு ஆதரவாகவும், காவிரி நதிநீர் பங்கீட்டு கண்காணிப்பு குழுவை உடனடியாக அமைக்க வேண்டும், காவிரியில் தமிழருக்கு தண்ணீர் பெற உரிமையில்லை என்றால் வெள்ள காலங்களில் தமிழகத்தை வடிகாலாக பயன்படுத்தக்கூடாது, காவிரியில் மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர். 

Next Story